உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

தாண்டிக்குடி : பழங்குடியினருக்கான காச நோய் விழிப்புணர்வு முகாம் வடகவுஞ்சி ஊராட்சி கடமன்ரேவுவில் நடந்தது. மாவட்ட காச நோய் கட்டுபாடு டாக்டர் பாலாஜி பழங்குடி மக்களை பரிசோதித்து சிகிச்சையளித்தார். கொடைக்கானல் அரசு மருத்துவமனை சார்பில் பல், சித்தா, பொது மருத்துவ டாக்டர்கள் சிறப்பு சிகிச்சையளித்தனர். முகாமில் பல்வேறு வகையான சிகிச்சை முறைகள் அரசு மருத்துவமனையில் உள்ளது குறித்து எடுத்துரைக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்கு பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. முகாமில் திருத்தியமைக்கப்பட்ட காச நோய் தடுப்பு மைய ஆலோசகர்கள் டாக்டர் மாரியப்பன், ஜான்பீட்டர் மற்றும் ரியாக் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் ஜான், ஆக்ட் இந்தியா பவுண்டேஷன் இயக்குனர் அசோக்ராஜா, பழங்குடியின பிரதிநிதிகள் சரஸ்வதி, கவுன்சிலர் கண்னையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சமுதாய அமைப்பாளர் சந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை