உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நகாரட்சி, பேரூராட்சிகளில் மனுத்தாக்கல் இல்லை

நகாரட்சி, பேரூராட்சிகளில் மனுத்தாக்கல் இல்லை

திண்டுக்கல் : முதல் நாளான நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் 37 பேர் மனுத்தாக்கல் செய்தனர். நகராட்சி, பேரூராட்சிகளில் ஒருவர் கூட மனுத்தாக்கல் செய்யவில்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் நான்கு நகராட்சி, 23 பேரூராட்சி, 23 மாவட்டகவுன்சிலர், 306 ஊராட்சிகள் மற்றும் இவற்றிற்கான வார்டு உறுப்பினர்களுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவி மற்றும் வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஒருவர் கூட மனுத்தாக்கல் செய்யவில்லை. இதே போல் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும் ஒருவர் கூட மனுத்தாக்கல் செய்யவில்லை. ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட தொப்பம்பட்டி ஒன்றியம் ராஜம்பட்டி ஊராட்சியில் ஒருவரும், நத்தம் ஒன்றியம் ஆவிச்சிபட்டியில் ஒருவரும் மனுத்தாக்கல் செய்தனர். நிலக்கோட்டை ஒன்றியத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு போட்டியிட சிலுக்குவார்பட்டி, பள்ளபட்டி, குல்லிசெட்டிபட்டி ஆகிய ஊராட்சிகளில் தலா ஒருவரும், எத்திலோடு ஊராட்சியில் இருவரும் மனுத்தாக்கல் செய்தனர். வத்தலக்குண்டு ஒன்றியத்தில் விராலிப்பட்டி, எழுவனம்பட்டி ஊராட்சியில் வார்டு உறுப்பினருக்கு தலா ஒருவரும், வடமதுரை ஒன்றியம் பிலாத்து ஊராட்சியில் வார்டு உறுப்பினருக்கு ஐந்து பேரும், சித்துவார்பட்டியில் ஒருவரும் மனுத்தாக்கல் செய்தனர். ஒட்டன்சத்திரம் ஒன்றியம், ஜவ்வாதுபட்டி, வெரியப்பூர், வீரலப்பட்டி, சின்னக்காம்பட்டி ஊராட்சிகளில் தலா ஒருவர், வார்டு உறுப்பினர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்தனர். ஊராட்சி தலைவர் பதவிக்கு இருவரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 35 பேரும், முதல் நாளில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி