| ADDED : ஆக 19, 2011 10:15 PM
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் டி.ஆர்.ஓ., பணியிடம் மூன்று மாதங்களாக காலியாக உள்ளது. கலெக்டரே முழு பணிகளையும் கவனிப்பதால், வருவாய் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு பின் கலெக்டர், டி.ஆர். ஓ., இடமாற்றம் செய்யப்பட்டனர். கலெக்டராக இருந்த வள்ளலாருக்கு பதில், நாகராஜன் நியமிக்கப்பட்டார். டி.ஆர்.ஓ., வாக இருந்த கணேசனுக்கு பதில் வேறு நபர் நியமிக்கப்படவில் லை. இதனால் இரண்டு மாதங்களாக பணியிடம் காலியாகவே இருந்தது. இதையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரிந்த லதாவை, சில வாரங்களுக்கு முன் டி.ஆர்.ஓ., வாக நியமித்து, அரசு உத்தரவிட்டது.அவர் பொறுப்பேற்காத நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட சுதந்திர தின அழைப்பிதழிலும் டி.ஆர்.ஓ., பெயர் இடம் பெற்றிருந்தது.அவர், இதுவரை டி.ஆர்.ஓ., வாக பொறுப்பேற்காததால், தொடர்ந்து இப்பணியிடம் காலியாகவே உள்ளது. மூன்று மாதங்களாக பணியிடம் காலியாக உள்ளதால், மாவட்டத்தில் முக்கிய வருவாய் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.டி.ஆர்.ஓ., பார்க்க வேண்டிய அனைத்து பணிகளையும் கலெக்டரே தலையிட்டு செய்யவேண்டிய நிலை உள்ளது. இதனால் பணிகளில் தாமதம் ஏற்படுகிறது.