உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மானிய விலையில் மா, எலுமிச்சை

மானிய விலையில் மா, எலுமிச்சை

வத்தலக்குண்டு : தோட்டக்கலை துறையில் மானிய விலையில் மா, நெல்லி, வாழைக்கன்றுகள் வழங்கப்படுவதாக, உதவி இயக்குனர் சங்கர் தெரிவித்தார்.அவரது அறிக்கை: விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் 20 எக்டேரில் மா; நெல்லி; 10 எக்டேரில் எலுமிச்சை கன்றுகள் வழங்கப்படுகின்றன. தென்னையில் ஊடுபயிர் கோகோ சாகுபடி செய்ய 80 எக்டேருக்கு கன்றுகள் வழங்கப்பட உள்ளன. மேலும், 50 சதவீத மானியத்தில் வாழை, வெங்காய இடுபொருட்கள், திசு வாழைக் கன்றுகள், சம்பங்கி இடுபொருட்கள், பி.கே. எம்.1 தக்காளி விதைகள் வழங்கப்படுகின்றன. விவசாயிகள் இரண்டு போட்டோ, சிட்டா, அடங்கலுடன் தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம், என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை