உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சமச்சீர் புத்தகத்தில் தவறுகள் : கையேடு விற்பனை "ஜோர்

சமச்சீர் புத்தகத்தில் தவறுகள் : கையேடு விற்பனை "ஜோர்

திண்டுக்கல் : சமச்சீர் பாடப் புத்தகங்களில் ஏராளமான தவறுகள் கண்டறியப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு, கணக்கு பாடத்தில் 40 ; அறிவியலில் 85; சமூக அறிவியலில் 425 தவறுகள் இருப்பதாக பட்டியல் இடப்பட்டுள்ளது. மாணவர்கள், தவறுகளை சரி செய்து படிக்க திண்டாடுகின்றனர். மாணவர்களுக்கு உதவ, தவறுகளை சுட்டிக்காட்டி, ஒரு தனியார் நிறுவனம், புத்தகம் வெளியிட்டுள்ளது.இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''மாணவர்கள் தவறானதை சரி என, நினைக்கும் நிலை உருவாகும். தவறுகளை திருத்துவதற்கே ஆசிரியர்களுக்கு பெரும்பாடாக உள்ளது. தனியார் நிறுவனங்கள் விளக்க புத்தகங்களை விற்கின்றன. இது மாணவர்களுக்கு எளிதாக உள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை