| ADDED : செப் 21, 2011 10:55 PM
குஜிலியம்பாறை : பாளையம் பேரூராட்சியை கைப்பற்ற, அ.தி.மு.க., கூட்டணியில் கடும் போட்டி நிலவுகிறது.பேரூராட்சி தலைவர், நேரடி ஓட்டு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். பாளையம் பேரூராட்சியை கைப்பற்ற அ.தி. மு.க., கூட்டணி கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.கடந்த சட்டசபை தேர்தலில், தொகுதியில் உள்ள மூன்று ஒன்றியங்களில், குஜிலியம்பாறை ஒன்றியத்தில் தான் கூடுதல் ஓட்டுகள் கிடைத்தன. அ.தி. மு.க., மார்க்சிஸ்ட், தே. மு.தி.க., கட்சிகள் இப்பகுதியில் வலுவாக உள் ளன.கனிம வளம், தொழிற்சாலைகளால் கடந்த ஆட்சியில் தி.மு.க., வினர் செழுமை அடைந்திருப்பதும், மற்ற கட்சிகளின் கண்ணை உறுத்த துவங்கியுள்ளன. இதனால், கூட்டணி கட்சிகளிடையே கடும் போட்டி எழுந்துள்ளது. கூட்டணியில் இருந்தாலும், மூன்று கட்சிகளும், தனித்தனியாக மக்கள் சந்திப்பு நடத்தி வருகின்றன. ஒவ்வொரு கட்சியும் 'உறுதியாக எங்களுக்கு தான்' என்ற பிரசாரத்திலும் இறங்கியுள்ளன. வற ட்சி பகுதியான இங்கு, தேர்தல் களம் இப்போதே சூடு பிடிக்க துவங்கியுள்ளது.