உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பக்தியுடன் வருவோர் பாதை மாறும் கொடுமை

பக்தியுடன் வருவோர் பாதை மாறும் கொடுமை

பழநி : பழநியில் சட்ட விரோத செயல்களால் பாதிப்படையும் பக்தர்களை பாதுகாக்க, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பழநி கோயிலுக்கு விசேஷ நாட்கள் மட்டுமின்றி, பிற நாட்களிலும் பக்தர்களின் வருகை உள்ளது. கேரள, ஆந்திர, கர்நாடக மாநில பக்தர்களும் அதிகளவில் வருகின்றனர். பக்தியுடன் வருவோரை, பாதை மாற்றும் வகையில் தடை செய்யப்பட்ட நிகழ்வுகள் பழநியில் அதிகரித்து வருகின்றன. ஒரு நம்பர், ஆன்-லைன் லாட்டரி, சூதாட்டம், விபசாரம், திருட்டு 'சிடி' விற்பனை தாராளமாக நடக்கிறது. போலீசாரின் கண்காணிப்பு உள்ள பஸ் ஸ்டாண்ட், அடிவாரம், திண்டுக்கல் ரோடு பகுதிகளிலும் இவை நடக்கின்றன. வலுவான 'கவனிப்பு' காரணமாக, இதை போலீசார் அலட்சியம் செய்கின்றனர். பெயரளவில், நடவடிக்கை எடுப்பதாக கண க்கு காட்டப்படுகிறது. இதனால் பக்தர்கள் பணம், பொருட்களை பறிகொடுக்கின்றனர். ஆன்-லைன் லாட்டரி மீதான போலீசாரின் நடவடிக்கை, வியப்பை ஏற்படுத்தியுள்ளது. செப்., 14 ல், பஸ் ஸ்டாண்ட் அருகே ரெய்டு நடத்திய போலீசார், ஆன்-லைன் லாட்டரி நடத்திய நாகராஜன் உள்பட 34 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது, சாதாரண சூதாட்ட வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டதால், அபராதம் செலு த்தி வெளியே வந்தனர். நேற்று முன்தினம் இரவு, மீண்டும் அதே பகுதியில் 'ரெய்டு' நடந்தபோது, முன்பு கைதான 15 பேர் உள்பட 37 பேர் மீண்டும் கைதாகியுள்ளனர்.இது கண்துடைப்பு நடவடிக்கை என்ற சந்தேகம் எழுந்துள்ளது.பக்தர்களை சுரண்டும் சட்ட விரோத நடவடிக்கைகளை போலீஸ் உயர் அதிகாரிகள், கட்டுப்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை