மேலும் செய்திகள்
டெபாசிட் தொகை கேட்டு அலையும் ஒப்பந்ததாரர்கள்
27-Aug-2024
13 ஊராட்சி தலைவர்கள் கூட்டம்
12-Sep-2024
மாவட்டத்தில் 306 ஊராட்சிகள் உள்ளன. இவற்றின் ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர்களுக்கான பதவிக்காலம் டிசம்பருடன் முடிவடைகிறது. பதவி முடிவதற்கான காலம் நெருங்குவதால் வளர்ச்சிப் பணிகள், அத்தியாவசிய பணிகளை முடிப்பதில் தேக்க நிலை ஏற்பட்டு உள்ளது. பல ஊராட்சிகளில் தெரு விளக்கு, குடிநீர் போன்ற அத்தியாவசிய பணிகள் நடைபெறாமல் உள்ளது. வார்டு உறுப்பினர்களிடம் முறையிட்டால் இரண்டு மாதம் தானே உள்ளது. அதன் பிறகு யாரிடம் கூறுவீர்கள். அதிகாரிகளை பார்த்து கேட்டுக் கொள்ளுங்கள் என கை விரிக்கின்றனர். ஊராட்சித் தலைவர்களிடம் முறையிட்டால் அவர்களும் அதே பதிலை தான் கூறுகின்றனர். சில ஊராட்சித் தலைவர்கள் அடுத்த முறையும் தாங்களே வெற்றி பெறுவதற்கு உண்டான வழிமுறைகளை கண்டறிந்து தெருவிளக்கு, குடிநீர் வசதி ஆகியவற்றில் தொய்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றனர். உள்ளாட்சி பிரதிநிதிகளின் அசட்டையான போக்கால் தி.மு.க.,விற்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தி உள்ளது. இதோடு பொதுமக்களை விரக்தி அடையச் செய்து மறியலை நோக்கி தள்ளுகிறது. நிலக்கோட்டை ஒன்றியம் மாலையகவுண்டன்பட்டி, வத்தலக்குண்டு ஒன்றியம் விராலிப்பட்டி உள்ளிட்ட சில ஒன்றியங்களில் மறியல் வாடிக்கையாகி விட்டது.
27-Aug-2024
12-Sep-2024