உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  விலை உயர்ந்த பூக்கள் மல்லிகை கிலோ ரூ.2500

 விலை உயர்ந்த பூக்கள் மல்லிகை கிலோ ரூ.2500

திண்டுக்கல்: வளர்பிறை சுபமுகூர்த்த தினம் என்பதால் திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் நேற்று பூக்கள் விலை உயர்ந்து விற்பனையானது. மல்லிகை பூ கிலோ ரூ.2500க்கு விற்பனையானது. திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான அண்ணாவணிகவளாகத்தில் பூ மார்க்கெட் செயல்படுகிறது. திண்டுக்கல்லை சுற்றிய வெள்ளோடு, கலிக்கம்பட்டி, சின்னாளப்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, பெருமாள் கோவில்பட்டி, அதிகாரிப்பட்டி, கொசவபட்டி உட்பட பல்வேறு கிராமங்களில் விளையும் பூக்களை விற்பனைக்காக விவசாயிகள் திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வருவர். இங்கிருந்து தமிழகம் , புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. தொடர் சாரல் மழையின் காரணமாக திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு ஒருவாரமாக பூக்கள் வரத்து குறைவாக இருந்து வந்தது. இந்நிலையில் இன்று (நவ.23), வளர்பிறை முகூர்த்தத்தை ஒட்டி திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்து விற்பனையானது. மல்லிகை கிலோ ரூ.2500, கனகாம்பரம் ரூ.1500, முல்லை ரூ.1000, ஜாதிப்பூ ரூ.800, சம்பங்கி ரூ.200, செண்டுமல்லி ரூ.80 ,பட்டன்ரோஸ் ரூ.500, கோழிக்கொண்டை ரூ.100, பன்னீர் ரோஸ் ரூ.250க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை