உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பூங்காவில் கவாத்து பணி

பூங்காவில் கவாத்து பணி

கொடைக்கானல் : கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் கோடைகால மலர் கண்காட்சிக்காக 10 ஏக்கரில் 16 ஆயிரம் செடி , 1500 வகை ரோஜாக்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. இங்கு உள்ள ரோஜா செடிகளில் கவாத்து பணி நடந்தது. இதை தோட்டக்கலை துணை இயக்குனர் காயத்ரி பார்வையிட்டார். தோட்டக்கலை அலுவலர் பார்த்தசாரதி உடனிருந்தார். எதிர்வரும் வாரங்களில் நீர் பாய்ச்சுதல், தொழு உரமிடுதல் என செடிகளின் வளர்ச்சிக்கு தகுந்த பணிகள் மேற்கொள்ளப்படும் என தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை