உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கண்டுகொள்ளாத தேர்தல் விதிகள்; சுவர் விளம்பரங்கள் தாராளம்

கண்டுகொள்ளாத தேர்தல் விதிகள்; சுவர் விளம்பரங்கள் தாராளம்

சின்னாளபட்டி : திண்டுக்கல் ,சின்னாளபட்டியில் தேர்தல் நடத்தை விதிகளை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என புகார் எழுந்துள்ளது.பார்லிமென்ட் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து ஊராட்சி துவங்கி பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என அனைத்து பகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதற்காக தேர்தல் பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது. இருப்பினும் பல இடங்களில் நடத்தை விதிகளை அமல்படுத்துவதில் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.சில இடங்களில் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டது. அரசியல் தலைவர்களின் சிலைகள், மறைக்கப்பட்டு உள்ளது. ஆனால் திண்டுக்கல் ,பூஞ்சோலை-திண்டுக்கல் ரோடு, சின்னாளபட்டி விலக்கு உள்ளிட்ட இடங்களில் சில கட்சிகளின் சின்னங்களும், அரசியல் தலைவர்கள் படங்கள் கொண்ட சுவர் விளம்பரம், போஸ்டர்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை அகற்றுவதில் உள்ளாட்சி நிர்வாகம் பாரபட்சம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை