உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் கருவேல மரங்கள் பறிமுதல்

பழநியில் கருவேல மரங்கள் பறிமுதல்

பழநி : முறையான உத்தரவு இல்லாமல் வெட்டப்பட்ட மூன்று லட்சம் மதிப்புள்ள கருவேல மரங்களை, ஏ.கலையம்புத்தூரில் வருவாய்த்துறையினர் வாகனத்துடன் பறிமுதல் செய்தனர். பழநி தாலுகா ஏ.கலையம்புத்தூர் அருகே தாமரைக்குளத்தில் ஏராளமான கருவேலம் மரங்கள், சமூக காடுகள் திட்டத்தில் வளர்க்கப்பட்டிருந்தன. இவை டெண்டர் விடப்பட்டு, மரங்களை வெட்டும் பணி நடந்தது. பழநி தாசில்தார் மனோகரன் தலைமையிலான வருவாய்துறையினர் இப்பணியை ஆய்வு செய்தனர். இதற்கான அனுமதி உத்தரவில் 2011 க்கு பதிலாக, சென்ற ஆண்டு தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து அங்கு வெட்டப்பட்டிருந்த மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரங்களை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர், அவற்றை ஏற்றி செல்ல வந்திருந்த லாரிகள் மூலம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டுவந்தனர். இந்த வாகனங்கள், மரங்களை விடுவிக்க சமூக காடுகள் திட்ட ரேஞ்சர் முத்துராஜா தலைமையிலான வனத்துறையினர், வருவாய்த்துறையினருடன் பேச்சு வார்த்தை நடத்தியும் பலனில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை