உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிறுமி கடத்தல்: வாலிபர் கைது

சிறுமி கடத்தல்: வாலிபர் கைது

வேடசந்துார்: வேடசந்துார் அருகே இன்ஸ்டாகிராம் காதலில் 14 வயது சிறுமியை கடத்திய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.வேடசந்துார் அருகே கன்னடம் பட்டியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி அந்தபகுதி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் திருச்சி குளித்தலை அருகே உள்ள பொய்யாமணியை சேர்ந்த திருப்பூர் ஆலையில் பணிபுரியும் மாதேஸ்வரன் 20, உடன் இரு மாதங்களாக நட்பு இருந்து வந்தது.இதை தொடர்ந்து திருப்பூரில் இருந்து கன்னடம்பட்டி வந்த மாதேஸ்வரன் 14 வயது சிறுமியை கடத்தி குளித்தலை பொய்யாமணி சென்றார். வேடசந்துார் எஸ்.ஐ., பாண்டியன் தலைமையிலான போலீசார் அலைபேசி சிக்னலை வைத்து பொய்யாமணி சென்று இருவரையும் அழைத்து வந்தனர். சிறுமியை திண்டுக்கல் அன்னை சத்யா ஹோமுக்கு அனுப்பி வைத்தனர். மாதேஸ்வரனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை