உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை குழந்தை வேலப்பர் கோயில் தேரோட்டம்: அரோஹரா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

கொடை குழந்தை வேலப்பர் கோயில் தேரோட்டம்: அரோஹரா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

கொடைக்கானல் : கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் தைப்பூச விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. அரோஹரா கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர் பழநி முருகன் கோயிலின் உபகோயிலான பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் திருவிழா ஜன.28 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பல்வேறு வாகனங்களில் சுவாமி நகர்வலம் வருதல் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கானோர் தேரின் முன் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர். பக்தர்கள் அரோஹரா கோஷம் எழுப்பியப்படி தேரை இழுத்தனர். மலைப்பகுதியிலேயே இது போன்ற தேரோட்டம் பூம்பாறை குழந்தைவேலப்பர் கோயிலில் மட்டுமே நடக்கிறது. ராஜா அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் பால், பன்னீர் , பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.இவ்விழாவையொட்டி ஏராளமான வெளியூர் பக்தர்கள் வருகை தந்த நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கான முன்னேற்பாடுகளை போலீசார் முறையாக செய்யாததால் பயணிகள் இரண்டு மணி நேரம் தாமதத்திற்கு பின்னரே பூம்பாறை வந்தடைய முடிந்தது. மேல்மலை பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் 3 மணி நேர தாமதத்திற்கு பின்னரே கிராமப் பகுதிகளை வந்தடைந்ததால் மலைப்பகுதி மக்கள் அவதியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை