உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோயில்களில் கும்பாபிஷேகம்

கோயில்களில் கும்பாபிஷேகம்

வேடசந்துார்: குளத்துப்பட்டி ஊராட்சி காமாட்சிபுரத்தில் எழுந்தருளியுள்ள விநாயகர், காமாட்சியம்மன், சப்தகன்னிமார், கருப்பணசாமி, மதுரைவீரன் தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா நடந்தது. தீர்த்தம் அழைத்தல், முளைப்பாரி ஊர்வலம், கால யாக பூஜை மஹா யாத்ரா தானத்தை தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது.வடமதுரை : தென்னம்பட்டியில் சாலை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் தீர்த்தம், முளைப்பாரி அழைப்புடன் துவங்கிய கும்பாபிஷேக விழாவில் இரண்டு கால யாக பூஜைகள் நடந்தன. கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. திண்டுக்கல் ஆதி காளியம்மன் கும்பாபிஷேக குழு நிர்வாகி பிரசன்ன வெங்கடேஷ் தலைமையிலான குழுவினர் நடத்தினர். சுற்றுப்பகுதி மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை