மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்
14 hour(s) ago
ஹாக்கி போட்டி
14 hour(s) ago
காட்டுமாடுகளால் பூண்டு விவசாயம் பாதிப்பு
14 hour(s) ago
கோயிலுக்கு சரக்கு வாகனம்
14 hour(s) ago
சாதித்த பி.வி.பி., பள்ளி மாணவர்
14 hour(s) ago
திண்டுக்கல்: திண்டுக்கல்லிலிருந்து நேற்று காலை பயணிகளுடன் திருச்சிக்கு புறப்பட்ட அரசு பஸ் பஞ்சரானாதால் பயணிகள் நடுரோட்டில் இறக்கிவிடப்பட்டனர். இதனால் பயணிகள் டென்ஷன் ஆகினர்.திண்டுக்கல்லிலிருந்து திருச்சிக்கு நேற்று காலை 10:00 மணிக்கு பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று புறப்பட்டது.இந்தபஸ் திண்டுக்கல் திருச்சி ரோடு ரயில்வே மேம்பாலத்தில் வந்தபோது பஸ்சின் முன்புறத்தில் உள்ள டயர் பஞ்சரானது. இதனால் பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டனர். இவ்வழித்தடத்தில் வந்த வேறு ஒரு பஸ்சில் பயணிகளை ஏற்றிவிட்டனர். போக்குவரத்து ஊழியர்கள் டயரை கழற்றி பஞ்சர் ஒட்ட 1 மணி நேரத்திற்கு பின் பஸ் புறப்பட்டது. டவுண் பஸ்களில்தான் இந்நிலை என்றால் நெடுந்துார பஸ்களிலும் இதே நிலையே தொடர்கிறது. இது போன்ற நிலையில் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. புதிய பஸ் வருகிறது என போக்குவரத்து கழக அதிகாரிகள் அறிவிப்பு விடுவதாடு சரி.புதிய பஸ்களை தான் காண முடிவதில்லை.தொடரும் இப்பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருக்கிற பஸ்களையாவது பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இயக்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago