உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வீட்டு குடிநீர் இணைப்பு வழங்குவதில் அதிகாரிகள் நடவடிக்கை தேவை

வீட்டு குடிநீர் இணைப்பு வழங்குவதில் அதிகாரிகள் நடவடிக்கை தேவை

மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வீடு தோறும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படுகிறது. பல இடங்களில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கி பல ஆண்டுகள் கடந்துள்ளது. தற்போது சில பேரூராட்சி பகுதிகளில் புதிதாக இணைப்புக்கு பணம் செலுத்திய பின்பும் குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் இழுத்தடிப்பு செய்கின்றனர். அவற்றில் கீரனுார், பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்க உள்ள விண்ணப்பம் பெற்று பல மாதங்கள் ஆன நிலையில் முறையாக குடிநீர் இணைப்பு வழங்குவதில் சிக்கல் உள்ளது. நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் புதிய குடிநீர் இணைப்பு வீடுகளுக்கு வழங்குவதில் பிரச்சனை உள்ளது. பல உள்ளாட்சி அமைப்புகளில் பல இடங்களில் முறையான தண்ணீர் விநியோகம் இருப்பதில்லை எனவே மாவட்ட உள்ளாட்சி நிர்வாகம் குடிநீர் இணைப்புகளை முறையாக வீடுகளுக்கு வழங்கி பொதுமக்கள் ஏமாறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை