| ADDED : ஜூன் 24, 2024 04:37 AM
கல்வி உதவி வழங்கல்வடமதுரை: கொம்பேறிபட்டியில் ஏ.பி.ஜே., அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை சார்பாக கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. ஊராட்சி தலைவர் ராஜரத்தினம் தலைமை வகித்தார். அறக்கட்டளை நிறுவனர் மருதைகலாம் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் முத்துக் கார்த்தி வரவேற்றார். கணவாய்பட்டி அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரிட்டோ லீனஸ்ராஜ், ஊராட்சி வார்டு உறுப்பினர் காளீஸ்வரிநாகராஜன், மக்கள் நலப்பணியாளர் முருகாம்பாள் பங்கேற்றனர்.புதிய ரோடு தேவைவடமதுரை: வடமதுரை பேரூராட்சி சீத்தப்பட்டி, உடையாம்பட்டி, தும்மலக்குண்டு பகுதியினர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நுாற்பாலைகளுக்கு வேலைக்கு செல்ல திண்டுக்கல் நகருக்கு பஸ் ஏற ஆதம்ஸ் நகர் வழியே சுற்றுப்பாதையில் அதிக துாரம் பயணிக்கும் நிலை உள்ளது. வடமதுரை திருக்கண் ரோட்டில் உடையாம்பட்டி அருகிலிருந்து பிரியும் 500 மீட்டர் வண்டிப்பாதை சிக்காளிப்பட்டி ரோட்டுடன் இணைக்கிறது. அங்கிருந்து ஆண்டிமாநகர் பஸ் நிறுத்தம் வரை மேலும் 800 மீட்டர் வண்டிப்பாதைக்கென நிலம் அரசு பதிவேடுகளில் உள்ளது. இந்த வழித்தடத்தை தார் ரோடாக மாற்றினால் பல கிராம மக்கள் பயன்பெறுவர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆலோசனை கூட்டம்நத்தம்: நத்தம் தாலுகா அலுவலக வளாகத்தில் கள்ளச்சாராயத்தை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. தாசில்தார் சுகந்தி தலைமை வகித்தார். -இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி முன்னிலை வகித்தார். நத்தம் சுற்று வட்டார பகுதிகளில் யாரேனும் கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, வெளிமாநில மதுபாட்டில்கள் விற்பனை செய்தாலோ தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.