| ADDED : மார் 13, 2024 12:12 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் முஸ்லிம்களின் ரம்ஜான் நோன்பு நேற்று திறக்கப்பட்டதையொட்டி பள்ளி வாசல்களில் ஏராளமானோர் சிறப்பு தொழுகை நடத்தினர்.ஆண்டுதோறும் ரம்ஜான் மாதத்தில் பிறை கண்டு நோன்பு துவங்குவது முஸ்லிம்கள் வழக்கமாகும். இந்த ஆண்டின் நோன்பு நேற்று திறக்கப்பட்டதையொட்டி மதுரை ரோட்டிலுள்ள பெரிய பள்ளிவாசல், சந்துக்கடை, முகமதியாபுரம், நாகல்நகர், வேடபட்டி என மாவட்டத்தின் அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது. முஸ்லிம்கள் பலர் வீடுகளிலும், தொழில் செய்யும் நிறுவனங்களிலும் சிறப்பு தொழுகை நடத்தி நோன்பை கடைபிடித்தனர். ஒருமாதம் வரை முஸ்லிம்களால் கடைபிடிக்கப்படும் இப்தார் நோன்பு ரம்ஜான் மாத சிறப்பாகும்.மாவட்டத்தில் பல வணிக நிறுவனங்களில் மட்டுமல்லாது பல தனியார் மருத்துவமனைகளிலும் முஸ்லிம்களுக்கான ரமலான் மாத சிறப்பு தொழுகைக்கான இடவசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.