உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ஆக்கிரமிப்பில் பழநி மாப்பிள்ளை நாயக்கன்குளம்

 ஆக்கிரமிப்பில் பழநி மாப்பிள்ளை நாயக்கன்குளம்

ஆயக்குடி: பழநி ஆயக்குடி, மாப்பிள்ளை நாயக்கன் குளத்தில் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளதால் தண்ணீர் அளவு குறைந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பழநி ஆயக்குடி பகுதியில் உள்ள இக்குளத்தின் மூலம் 100 ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகிறது. வரதமா நதி அணை பாசன குளங்களில் பெரிய குளத்தின் வழியாக வரத்து வாய்க்கால் மூலம் தண்ணீர், மாப்பிள்ளை நாயக்கன் குளத்தை அடைகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதால் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. ஆக்கிரமிப்பு காளிமுத்து, விவசாயி,பழநி வரதமா நதி நீர்ப்பாசன ஒருங்கிணைப்பு குழு: குளத்தின் பெரும்பாலான பகுதிகள் நீர்வரத்து பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து தென்னை மரங்கள் நடப்பட்டுள்ளன. அதிகாரிகளிடம் இதுகுறித்து மனு அளித்துள்ளோம். மேலும் பல ஆண்டுகளாக வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. குளத்தின் அருகிலேயே பேரூராட்சி பொதுக் கழிப்பிடம் உள்ளது. கழிவுகள் குளத்தில் கலக்கின்றன. இதனால் நோய் தொற்று அபாயம் ஏற்படுகிறது. குளத்தை தூர்வார வேண்டும் துரைசாமி, மாப்பிள்ளை நாயக்கன் குளம் பாசன விவசாயிகள் சங்க உறுப்பினர்: மாப்பிள்ளை நாயக்கன் குளத்தில் பாசன வசதி பெறும் நிலங்களில் ஒரு போகம் எடுக்க குளம் மூன்று முறை நிறைய வேண்டும். இந்நிலையில் குளத்தில் நீர் பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் தண்ணீர் அளவு குறைந்துள்ளது. எதிர்காலத்தில் போதுமான தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். குளத்தின் கரை பல ஆண்டுகளாக சரி செய்யப்படவில்லை குளத்தை தூர்வார வேண்டும். குளத்தின் மதகுகளை சரி செய்து புதர்களை அகற்ற வேண்டும். நடவடிக்கை தேவை பிரகாசம், மீன் பிடிப்பு ஒப்பந்ததாரர், ஆயக்குடி: குளத்தில் அனுமதியுடன் மீன்பிடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன். குளத்தில் உள்ள மண்ணை அகற்றி குழி செய்துள்ளனர். இதனால் தண்ணீர் குறையும் போது குழியில் மட்டும் தண்ணீர் நிற்கும். மீன் வளர்ச்சி பாதிக்கப்படும். இதனால் இழப்பு ஏற்படும். எனவே அதிகாரிகள் இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை