உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முடிமலை ஆண்டவர் கோயிலில் புரவி எடுப்பு

முடிமலை ஆண்டவர் கோயிலில் புரவி எடுப்பு

நத்தம் : நத்தம் செந்துறை அருகே களத்துபட்டி முடிமலை ஆண்டவர், ராவள ஈஸ்வரன், கருப்பசுவாமி கோயில்களில் நடந்த புரவி எடுப்பு திருவிழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.இவ்விழாவில் பெரியூர்பட்டி முத்தாலம்மன் கோயில் குளக்கரையில் பிடிமண் எடுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமி சிலைகள் வானவேடிக்கைகளுடன் களத்துப்பட்டி முடிமலை ஆண்டவர் கோயில் மந்தைக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கண் திறக்கப்பட்டது. அங்கு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.தொடர்ந்து நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்ட முடிமலை ஆண்டவர்,ராவள ஈஸ்வரன், கருப்பசாமி, கன்னிமார், குதிரை, காளை, மதிலை சிலைகள் ஊர்மந்தையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வாணவேடிக்கைகளுடன் வந்தது. சுற்று கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கபட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை