| ADDED : ஜன 01, 2024 06:02 AM
மின் பெட்டியால் காத்திருக்கு ஆபத்துதிண்டுக்கல்- பழநி பைபாஸ் ரோட்டில் திறந்த நிலையில் உள்ள மின் பெட்டியால் விபத்து அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி மின் பெட்டி தாழ்வாக இருப்பதால் சிறுவர்கள் தொடும் துாரத்தில் உள்ளது. இதை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் முன்வர வேண்டும். பாலமுருகன், திண்டுக்கல்.-------திறந்தவெளி கழிவுநீரால் அவதிவேடசந்துார் தாலுகா அலுவலக ரோட்டில் திருமண மண்டபத்திற்கு பின் அங்கன்வாடி மையத்திற்கு செல்லும் வழியில் கழிவுநீர் கால்வாய் மேல் மூடி அமைக்கவில்லை. இதனால் திறந்தவெளியில் செல்லும் கழிவுநீர் தொற்று நோய் பரப்புகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழனிவேல், வேடசந்துார்.--------குப்பையால் உருவாகும் சீர்கேடுவடமதுரையில் தும்மலக்குண்டு பிரிவு நான்கு வழி ரோட்டோரம் குப்பையை கொட்டி தீ வைக்கின்றனர். இதனால் இவ்வழியில் செல்லும் மக்கள் பல பிரச்னைகளை சந்திக்கின்றனர். இங்கு குப்பை கொட்டி தீவைப்பதை பேரூராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும். - கண்ணன், வடமதுரை.--------மக்களை அச்சுறுத்தும் தெருநாய்கள்வேடசந்துார் நேருஜி நகரில் தெரு நாய்கள் அதிகமாக உள்ளது. இதனால் தெருக்களில் குழந்தைகள் நடமாடவே முடியவில்லை. எப்போது சென்றாலும் துரத்துகின்றன. இதை தடுக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மோகன்ராஜ்,வேடசந்துார்.---------சேதமான ரோடால் தவிப்புகொல்லபட்டியிலிருந்து மூனுார் செல்லும் ரோடு பல மாதங்களாக சேதம் அடைந்துள்ளது. இவ்வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் படாதபாடு படுகின்றனர். இரவில் விபத்துக்களும் ஏற்படுகிறது. இதை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கந்தசாமி ஒட்டன்சத்திரம்.----------சுகதாரக்கேடை ஏற்படுத்தும் கழிவுகள்திண்டுக்கல்- திருச்சி ரோட்டில் குப்பையை மலைபோல் குவித்து வைப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. பல்வேறு பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட குப்பை இங்கே கொட்டப்படுகிறது. சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். செல்வி, என்.ஜி.ஓ., காலனி.----------செடிகளால் அச்சமடையும் மக்கள்நத்தம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பிரிவு பகுதியில் செடிகள் வளர்ந்து உள்ளது. இதனால் கொசு தொல்லை,ரோட்டில் திரியும் கால்நடைகளும் மருத்துவமனை வளாகத்திற்குள் வருகின்றன. அதிகாரிகள் இங்குள்ள செடிகளை அகற்ற வேண்டும். வீரமணி, நத்தம் வேலம்பட்டி...............................................................