உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி மாசி விழாவில் கம்பம் சாட்டுதல்

பழநி மாசி விழாவில் கம்பம் சாட்டுதல்

பழநி : பழநி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் திருக்கம்பம் சாட்டுதல் நடந்தது.பழநி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா மூகூர்த்தகால் நடுதலுடன் பிப்.9ல் துவங்கியது. நேற்று (பிப்.13) திருக்கம்பம் தயாரிக்க அரிவாள் காணியாளர் நரேந்திரன், பண்ணாணடி ராஜா எடுத்துக் கொடுக்க கோயில் கண்காணிப்பாளர் அழகர்சாமி முன்னிலையில் நடைபெற்றது.இரவு கம்பம் அலங்கரித்தல் பின் மாரியம்மன் கோயில் முன் கம்பம் சாட்டு விழா நடந்தது. பக்தர்கள் கம்பத்திற்கு பால், மஞ்சள் நீர் அபிஷேகம் செய்து வழிபட்டனர். பிப்.,20 மாலை கொடியேற்றம், பூவோடு வைத்தல்,பிப்.27 இரவு திருக்கல்யாணம், பிப்.28ல் தேரோட்டம் நடைபெறுகிறது. பிப்.29ல் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை