| ADDED : நவ 25, 2025 04:23 AM
சின்னாளபட்டி:திண்டுக்கல் தெற்கு மாவட்ட பா.ம.க., செயற்குழு கூட்டம் அம்பாத்துறை அருகே ராமநாதபுரத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் மு.க.நாகேந்திரன் தலைமை வகித்தார். வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் அஜித்குமார், பொருளாளர் நிர்மலா ஞான சவுந்தரி, நிர்வாகி பழனிச்சாமி முன்னிலை வகித்தனர்.ஆத்துார் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். வடக்கு மாவட்ட செயலாளர் ஜோதிமுத்து, கிழக்கு மாவட்ட செயலாளர் பரசுராமன், வன்னியர் சங்க ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் கோபால் பேசினர்.கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடக்க உள்ள ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்கத்தை சுற்றுலா தலமாக்குதல், குடகனாறு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கும் வகையில் நீர் பங்கீட்டை முறைப்படுத்தல், சின்னாளபட்டியில் சுங்குடி சார்ந்த தொழில்களுக்கான ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைத்தல், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு ஆகியவற்றை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.-