திண்டுக்கல் : திண்டுக்கல் ஜி.டி.என். கலை கல்லுாரியில் தமிழ் துறை சார்பாக தமிழ் பொங்கல் விழா முதல்வர் பாலகுருசாமி தலைமையில் நடந்தது. தாளாளர் ரெத்தினம் முன்னிலை வகித்தார். சுயஉதவி பிரிவு தமிழ் துறை தலைவர் மகாலெட்சுமி வரவேற்றார். கல்லுாரி இயக்குனர் துரை ரெத்தினம், கல்வி இயக்குனர் மார்க்கண்டேயன், சுய உதவி பிரிவு துணை முதல்வர் நடராஜன், தமிழ் இணை பேராசிரியர் சாந்தினி, தமிழ் துறை தலைவர் சுஜாதா, முன்னாள் தமிழாசிரியர் ராசகோபால், தமிழர் மாமன்ற தலைவர் ராமசாமி, கல்லுாரி ஊடக துறை தலைவர் காதர்பாட்சா, பேராசிரியர்கள் சூர்யா, .முத்துலட்சுமி பேசினர். மாணவிகள் சுஹாசினி, அனிதா, பேராசிரியர் ராஜா தமிழர் பெருமை கவிதை வாசித்தனர். உதவி பேராசிரியர் சூர்யா நன்றி கூறினார். திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.நெய்க்காரப்பட்டி: பழநி நெய்க்காரப்பட்டி கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. கலை நிகழ்ச்சிகள்,போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தாளாளர் ராஜாகவுதம், அறங்காவலர் குழு உறுப்பினர் சித்ரா,முதல்வர் சாந்தி பங்கேற்றனர்.தருமத்துப்பட்டி : டி.எம்.பி., துவக்கப்பள்ளியில் பள்ளி தாளாளர் ஆர்.கே.சுப்ரமணி தலைமை வகித்தார். மக்கள் தொடர்பு அலுவலர் முருகையா, தலைமை ஆசிரியர் மணிமேகலை முன்னிலை வகித்தனர். ஆசிரியை செல்வி வரவேற்றார். கும்மியடித்தல், குலவையிடுதல் போன்றவற்றுடன் கொண்டாடினர். கோலப்போட்டி, பானை உடைத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நாகரத்தினம், பாப்பாத்தி, ராஜாத்தி, பத்மா, சகானா, கவிதா செய்திருந்தனர்.