உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சின்னாளபட்டியில் பூக்குழி திருவிழா

சின்னாளபட்டியில் பூக்குழி திருவிழா

சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் அம்பாத்துறை ரோடு தேவி கருமாரியம்மன் புற்றுக் கோயில் மாசித்திருவிழா பிப். 9ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பிப். 14ல் சிறுமலையில் இருந்து புனித நீர் அழைப்புடன் துவங்கிய விழாவில் காந்தி மைதானம் அருகே அம்மன் கரகம் பாலித்தல் நடந்தது. காப்பு கட்டிய பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு, பூக்குழி இறங்குதல் நடந்தது. கோயில் பூசாரி சுப்புக்காளை தலையில் அம்மன் கரகத்துடன் பூக்குழி இறங்கினார். அவரைத் தொடர்ந்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள் அம்மன் சரண கோஷத்துடன் இறங்கினர்.பலர் கரும்பு தொட்டிலில் குழந்தையை சுமந்து கோயிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் பொங்கல், நீர்மோர் வினியோகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !