உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  இடும்பன் மலையில் விதைப்பந்துகள் வீச்சு

 இடும்பன் மலையில் விதைப்பந்துகள் வீச்சு

பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடும்பன் மலை மீது என்.சி.சி மாணவர்கள், தன்னார்வ அமைப்பினர் விதைப் பந்துகளை துாவினர். பழநி முருகன் கோயில் மனநல காப்பகத்தில் கோயில் நிர்வாகம், விழுதுகள் தன்னார்வ அமைப்பு , பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லுாரி, என்.சி.சி., மாணவர்கள் , கோயில் நிர்வாகம், தன்னார்வ அமைப்பு உருவாக்கிய 4000 விதைப்பந்துகளை இடும்பன் மலை மீது நேற்று துாவினர். இதுவரை 12 ஆயிரம் விதைப்பந்துகள் விசப்பட்டதோடு 32 ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டுள்ளன . பழநி மலை மீது சுற்றும் மயில்கள், பறவைகள் உணவுக்காக கேழ்வரகு, சோளம், கம்பு விதைகளும் தூவப்பட்டன. இதனால் அங்கு முளைக்கும் தானிய வகைகளை பறவைகளுக்கு இரையாக அமையும். கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லுாூரி முதல்வர் ரவிசங்கர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை