உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போலீஸ் ஸ்டேஷன்களில் போலீசார் பற்றாக்குறை! பழைய எண்ணிக்கையிலே இயக்கம்

போலீஸ் ஸ்டேஷன்களில் போலீசார் பற்றாக்குறை! பழைய எண்ணிக்கையிலே இயக்கம்

திண்டுக்கல் மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில், போலீசார் பற்றாக்குறையாக இருப்பதால் உற்ற சம்பவங்களை தடுப்பதில் சிரமம் ஏற்படுவதாக போலீசாரே புலம்புகின்றனர். மாவட்டத்தில் திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, கொடைக்கானல், நத்தம், வேடசந்துார் உள்ளிட்ட சப் டிவிஷன்களை கொண்ட போலீஸ் ஸ்டேஷன்களில் ஒவ்வொரு சப் டிவிஷன்களுக்கும் மகளிர் ஸ்டேஷன்கள் உள்ளன. இவற்றில் போலீஸ் ஸ்டேஷன்கள் தோன்றிய காலத்தில் இருந்து ஏற்படுத்தப்பட்ட பணியிடங்களே உள்ளன. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப போலீசார் பணியிடங்கள் உயர்த்தப்படவில்லை. ஓய்வு பெரும் போலீசாருக்கு பதிலாக புதிதாக போலீசார் நியமிக்கப்படவில்லை. சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, கியூ பிரிவு, நுண்ணறிவு, எஸ்.பி., தனிப்படை, மதுவிலக்கு, ஹைவே பெட்ரோல், கோர்ட், சிவில் சப்ளை கடத்தல் பிரிவு, போக்குவரத்து என மற்ற வகைகளுக்கும் போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்து அயல் பணியில் போலீசார் அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஏற்கனவே பற்றாக்குறையால் இயங்கி கொண்டிருக்கும் போலீஸ் ஸ்டேஷன்கள் அயல் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்ட போலீசார் தவிர சொற்ப எண்ணிக்கையிலே ஸ்டேஷன்களில் போலீசார் உள்ளனர். இவர்களை கொண்டு சட்டம் ஒழுங்கு, குற்றங்களை தடுப்பதில் பெரும் சவால்களை எதிர் கொள்ள வேண்டிய இருப்பதாக போலீசாரே புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை