உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தடகளத்தில் சாதித்த சாவித்திரி பள்ளி மாணவர்கள்

தடகளத்தில் சாதித்த சாவித்திரி பள்ளி மாணவர்கள்

திண்டுக்கல் : திண்டுக்கல் முகிலம் அகாடமி சார்பில் மாவட்ட விளையாட்டரங்கில் நடந்த தடகள போட்டிகளில் ஸ்ரீசாவித்திரி வித்யாசாலா தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று பரிசுகளை வென்றனர்.ஓட்டபந்தயம், பந்து எறிதல், நீளம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்ற 3ம் வகுப்பு மாணவர் விக்ரம்குமார் முதல் பரிசாக தங்க பதக்கம் , 2ம் பரிசாக வெள்ளி பதக்கங்களை வென்றார். குண்டு எறிதலில் முதலிடம் பெற்ற 5ம் வகுப்பு மாணவர் ரோஹித் குமார் தங்க பதக்கம், நீளம் தாண்டுதலில் 3ம் பரிசு வென்ற 3ம் வகுப்பு மாணவர் விஷ்ணுகரன் வெண்கல பதக்கம், ஓட்ட பந்தயத்தில் முதலிடம் பெற்ற மாணவி ரித்திகாஸ்ரீ தங்க, வெண்கல பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர்.உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் டென்னிஸ், கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று 3ம் இடம் பிடித்தனர். சாதித்த மாணவர்களை பள்ளி நிர்வாகியும் எம்.எல்.ஏ.,யுமான காந்திராஜன் வாழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை