மாணவர்கள் பதவி ஏற்பு
ஒட்டன்சத்திரம்: ஸ்ரீராமபுரம் வித்விதா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் மாணவர்கள் பதவியேற்பு விழா நடந்தது. தலைவர்கள் அர்னேஷ், தக் ஷிதா, உப தலைவர்கள் சந்தோஷ், தக் ஷனா, கலாசார துறை தலைவர் ஷீரின் பர்கானா, உப தலைவர் சஸ்மிதா, விளையாட்டுத் துறை தலைவர் தருண், உப தலைவர் ஹாசினி, அணி , துறை வாரியாக தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பள்ளி நிர்வாகி சாமிநாதன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தாளாளர் சித்தார்த்தன், செயலாளர் கவுதமன், அறங்காவலர்கள் சுகன்யா, ராதிகா, பள்ளி முதல்வர் நர்மதா ஸ்ரீ, ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.