உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இறந்தவர் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம்

இறந்தவர் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம்

பட்டிவீரன்பட்டி : அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மூர்த்தி 38. 2023ல் தோட்டத்தில் வேலை செய்த போது மின்சாரம் தாக்கி இறந்தார். இவர் அய்யம்பாளையம் ஸ்டேட் பாங்கில் சேமிப்பு கணக்கோடு விபத்து காப்பீடாக மாதம் ரூ. 500 செலுத்தினார். இவரது இறப்பையொட்டி அவரது மனைவி பாண்டிசெல்வியிடம் ரூ. 10 லட்சத்திற்கான செக்கினை திண்டுக்கல் மண்டல மேலாளர் தீபிகா தேஜா வழங்கினார். மேலாளர் சுஜாதா பிரியதர்ஷினி, கிளை மேலாளர் கவிதா, இன்சூரன்ஸ் அதிகாரி நந்தகுமார், வங்கி வணிகத் தொடர்பாளர் ராஜா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ