உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கொடை பஸ் ஸ்டாண்டில் காட்டுமாடு பயணிகள் தாக்கப்படும் அபாயம்

 கொடை பஸ் ஸ்டாண்டில் காட்டுமாடு பயணிகள் தாக்கப்படும் அபாயம்

கொடைக்கானல்: கொடைக்கானல் பஸ் ஸ்டாண்டில் நடமாடும் காட்டுமாடுகளால் பயணிகள் தாக்கப்படும் அபாயம் உள்ளது. கொடைக்கானல் சர்வதேச சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். பொதுமக்கள் அதிகளவு வந்து செல்லும் பஸ் ஸ்டாண்டில் நேற்று மாலை காட்டுமாடு சர்வ சாதாரணமாக நடந்து சென்றது. பயணிகள் வளர்ப்பு மாடு என சாதாரணமாக நிற்கும் சூழலால் தாக்கப்படும் அச்சுறுத்தல் உள்ளது. வனத்துறை இவ்விஷயத்தில் அக்கறை காட்டி நகரில் சுற்றித் திரியும் காட்டுமாடுகளை வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை