உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிரிக்கெட் போட்டியில் விக்னேஷ் அணிக்கு கோப்பை

கிரிக்கெட் போட்டியில் விக்னேஷ் அணிக்கு கோப்பை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம், சின்னாளபட்டி சண்முகம் அறுவை சிகிச்சை, கருத்தரிப்பு மருத்துவமனைசார்பில் நடந்த ஸ்ரீமதி கோப்பை 16 வயது பிரிவு கிரிக்கெட் இறுதி போட்டியில் திண்டுக்கல் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வெற்றி பெற்றது.பி.எஸ்.என்.ஏ. மைதானத்தில் நடந்த போட்டியில் திண்டுக்கல்விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழந்து 221ரன்கள் எடுத்தது. தீபன் 133(நாட்அவுட்) ரன்கள், சிவேஷ் தருண் 3, டேனிஷ் 4விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த திண்டுக்கல் பிரசித்தி வித்யோதயா அணி 48.5 ஓவரில் 183 ரன்கள் மட்டுமேஎடுத்து ஆல்அவுட்டானது. முகமது பஹீம் 100(நாட்அவுட்) ரன்கள், தீபன் 4 விக்கெட் எடுத்தனர்.ஆண்கள் பிரிவில் சிறந்த பேட்ஸ்மேனாக பிரசித்தி வித்யோதயா பள்ளி முகமது பஹீம், சிறந்த பந்து வீச்சாளராக டேனிஷ், சிறந்த ஆல்ரவுண்டராக தஷ்வின், சிறந்த நம்பிக்கை வீரராக விக்னேஷ் , தொடரின் சிறந்த வீரர்களாக விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியின் சஞ்சய் பாலாஜி, தீபன், பெண்கள் பிரிவில் சிறந்த பேட்ஸ்மேனாக ஜெய்சிவாஸ்ரீ, சிறந்த பந்து வீச்சாளராக ஐஸ்வர்யா, சிறந்த ஆல்ரவுண்டராக அஷ்ரங்கா, சிறந்த நம்பிக்கை வீரராக விஸ்வஹரிணி தேர்வு பெற்றனர்.சின்னாளபட்டி சண்முகம் சர்ஜிகல் பெர்டிலிட்டி மருத்துவமனை அதிபரும் மாவட்ட கிரிக்கெட் சங்க உதவி தலைவருமான டாக்டர் பாபு பரிசளித்தார். மாவட்ட கிரிக்கெட் சங்க உதவி தலைவர்கள் சித்தாந்த், வெங்கட்டராமன், இணைசெயலாளர்கள் ராஜமோகன், மகேந்திரகுமார், செயற்குழு உறுப்பினர்கள் திருப்பதி, செந்தில்வேலவன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை