உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் போலி மது விற்ற இருவருக்கு சிறை

திண்டுக்கல்லில் போலி மது விற்ற இருவருக்கு சிறை

திண்டுக்கல்: போலி மதுபான விற்பனை மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டு இருவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது. வத்தலகுண்டு ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்தவர் பாண்டி, இவரது மனைவி சாந்தி 27 . இவர்கள் 2014 ல் வத்தலகுண்டு வெங்காடஸ்திரி கோட்டை பகுதியில் போலி மது விற்றனர். இவர்களுக்கு புதுச்சேரியை சேர்ந்த சிவலிங்கம் 42, கணேசன் உடந்தையாக இருந்தனர். திண்டுக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதனிடையே பாண்டி, கணேசன் இறந்தனர். சாந்தி, சிவலிங்கத்துக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ராஜ்குமார் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை