உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரயில்வே சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேக்கம்! நிரந்தர தீர்வு காணலாமே நெடுஞ்சாலைத்துறை

ரயில்வே சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேக்கம்! நிரந்தர தீர்வு காணலாமே நெடுஞ்சாலைத்துறை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் மழை பெய்யும் போதெல்லாம் பெரும்பாலான ரயில்வே சுரங்கபாதைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. அவ்வப்போது நெடுஞ்சாலைத்துறை தற்காலிகமாக தீர்வு காண்கிறார்களே தவிர நிரந்தர தீர்வுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பெரும்பாலான மக்கள் அவதிப்படுகின்றனர். மாவட்டம் முழுவதும் ரயில் குறிக்கிடும் பாதையில் மக்கள் போக்குவரத்து நெரிசல்களில் சிக்காமல் இருக்க ரயில்வே,நெடுஞ்சாலைத்துறை இணைந்து ரயில்வே சுரங்கபாதைகளை அமைத்தனர். இங்கு மழை பெய்யும் போதெல்லாம் மழைநீர் குளம்போல் தேங்கி சுரங்கபாதையே மூடும் அளவிற்கு பிரச்னைகள் உள்ளது.இதில் செல்லும் வாகனங்கள் கோளாறுகள் ஏற்பட்டு அங்கேயே நிறுத்தப்படும் சூழல் நிலவுகிறது . இதனால் பெரும் விபத்துக்கள் ஏற்படும் நிலையும் அடிக்கடி ஏற்படுகிறது. மழைநீர் சுரங்கபாதையில் தேங்கும் நேரங்களில் மட்டும் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் மின்மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீரை வெளியேற்றுகின்றனர். மற்ற நேரங்களில் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டு விடுகின்றனர். நிரந்தரமாக தீர்வு கொண்டு வர வேண்டும் என மக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தபோதிலும் மவுனமாக இருக்கின்றனர். இவர்களாவது மழை நேரங்களில் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபடுகின்றனர். ரயில்வே நிர்வாகம் அந்தபக்கமே எட்டிப்பார்ப்பதே இல்லை. என்ன நடந்தால் நமக்கென்ன என இருக்கின்றனர். இவர்களுக்கு நடுவில் சிக்கி மக்கள் தான் பெரும் தர்ம சங்கடத்தை சந்திக்கின்றனர். வெயில் காலம் முடிந்து மீண்டும் மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் மழைநீர் தேங்கும் ரயில்வே சுரங்கபாதைகளை கண்டறிந்து தண்ணீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.......ஆய்வு செய்யலாமே ரயில்வே சுரங்கபாதையை கட்டும் போதே அதிகாரிகள் தண்ணீர் தேங்காமலிருக்கும் வகையில் திட்டம் தயாரிக்க வேண்டும். அதை விட்டு எல்லா பணிகளும் முடிந்த பிறகு தண்ணீர் வருமா,வராதா என எண்ணத்தில் இருக்க கூடாது. மழை நேரங்களில் திண்டுக்கல் மேட்டுப்பட்டி ஒத்தக்கண் பாலம் சுரங்கபாதையில் சமீபத்தில் பள்ளி பஸ் சிக்கியது. குழந்தைகளை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். இதுபோன்ற நிலையை தடுக்க நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் ரயில்வே சுரங்கபாதைகளை ஆய்வு செய்து தண்ணீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகமும் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்.சரவணன்,தொழிலாளி,திண்டுக்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
ஜூன் 11, 2024 09:50

இந்திய ரயில்வே பாதையை கடக்கவேண்டும் என நினைத்துதான் தண்டவாளத்திற்கு கீழே சாலைவசதி அமைத்து தருகிறது ரயில்வே நிர்வாகம். மழை பெய்தால் தண்ணீர் தேங்கும். அதை மோட்டார் உதவியுடன் மக்கள் தான் வெளியேற்றவேண்டும். இல்லாவிடின் சாலை ஆரம்பத்தில் ஒரு பொடுபோல் அமைத்தால் தண்ணீர் உள்ள செல்லாது. அனைத்திற்கும் அரசு நிர்வாகங்களை எதிர்பார்க்க கூடாது


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி