உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஏன் இந்த தாமதம்! மாணவர்களுக்கு வழங்கல சீருடை, பேக், காலணிகள்; பள்ளி திறந்து ஒரு மாதமாகியும் இழுத்தடிப்பு

ஏன் இந்த தாமதம்! மாணவர்களுக்கு வழங்கல சீருடை, பேக், காலணிகள்; பள்ளி திறந்து ஒரு மாதமாகியும் இழுத்தடிப்பு

அரசு பள்ளிகளில் 1 முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள், நோட்டுகள், பேக், சீருடை, காலணி , பென்சில் என 14 வகையான பொருட்களை அரசு வழங்கி வருகிறது. நடப்பு கல்வி ஆண்டில் ஜூன் 10ல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பாடப் புத்தகம் ,நோட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டன. தற்போது ஒரு மாதம் முடிந்து ஜூலை 13 ஆன நிலையில் மாணவர்களுக்கு தேவையான சீருடை, புத்தகப்பை, காலணி என எதுவும் வழங்கவில்லை. 1 முதல் 5 வரை துவக்கப் பள்ளிகளில் படித்துவிட்டு நடுநிலைப் பள்ளிக்கு 6 ம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு சீருடை வழங்காததால் கலர் டிரஸ் அணிந்து பள்ளிகளுக்கு செல்கின்றனர்.1 முதல் 5 வரை டவுசர் சட்டை, மாணவிகளுக்கு பாவாடை சட்டை வழங்கும் அரசு, 6ம் வகுப்பில் இருந்து மாணவர்களுக்கு பேண்ட் சட்டை , மாணவிகளுக்கு கோட், சுடிதார் வழங்குகிறது. மாணவர்களுக்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக வழங்கி வரும் நிலையில் இதை முறையான காலத்திற்குள் வழங்காததால் அரசுக்கு தான் கெட்ட பெயர் ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் இதை கண்காணித்து மாணவர்களுக்கு வந்து சேர வேண்டிய நலத்திட்டங்களை விரைந்து வழங்க முன் வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !