உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரேஷன் கார்டில் காஸ் சிலிண்டர் பதிவு பணி தீவிரம்

ரேஷன் கார்டில் காஸ் சிலிண்டர் பதிவு பணி தீவிரம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் விடுபட்ட காஸ் சிலிண்டர்களை ரேஷன் கார்டில் பதிவு செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது.ஈரோடு மாவட்டத்தில், மண்டல கூட்டுறவுத் துறை மூலம் 998 ரேஷன் கடை, நுகர்பொருள் வாணிப கழகத்தில் 14 கடை, மகளிர் குழு மூலம் 28 என 1,030 ரேஷன்கடை செயல்படுகின்றன. 5.15 லட்சம் அரிசி கார்டுகள், 60 ஆயிரம் அந்தியோதயா திட்ட கார்டுகள், 72 ஆயிரத்து 500 சர்க்கரை கார்டுகள் என 6.93 லட்சம் ரேஷன்கார்டுகள் உள்ளன.இவற்றில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான கார்டுகளுக்கு காஸ் சிலிண்டர் இணைப்பு உள்ளது. இரண்டு சிலிண்டர் இணைப்பு உள்ள கார்டுகளுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படுவதில்லை.ஒரு சிலிண்டர் இணைப்பு மற்றும் புதிதாக வழங்கிய கார்டுக்கு மூன்று லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது.இரண்டு சிலிண்டர் இணைப்பு இருந்தும் 30 சதவீதம் கார்டுகளில் ஒரு சிலிண்டர் இணைப்பு மட்டும் இருப்பதாக, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. இதை கார்டுதாரர்களும் ரேஷன் கடைகளில் தெரிவிக்காமல், பல ஆண்டாக ஒரு சிலிண்டர் உள்ளவர்கள் போல கூடுதலாக மூன்று லிட்டர் மண்ணெண்ணெய் பெறுகின்றனர். இதனால், ஈரோடு மாவட்டத்துக்கு கூடுதல் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு வழங்கி வந்தது.இரண்டு சிலிண்டர் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களையும் கணக்கில் கொண்டு வர கடந்தாண்டு முதல், வழங்கல் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.ஈரோடு மாவட்டத்தில் 'எல்காட்' நிறுவனத்தின் ரேஷன்கார்டுதாரர் குறித்த பதிவு மற்றும் காஸ் ஏஜன்ஸியிடம் உள்ள பதிவு விபரம் ஆகியவற்றை ஒப்பிட்டு, ஒரு கார்டுதாரரிடம் எத்தனை சிலிண்டர்கள் உள்ளது என்பதை கண்டறிகின்றனர்.சம்பந்தப்பட்ட ரேஷன்கடையில் கூடுதல் சிலிண்டர் உள்ள கார்டுதாரர் விபரத்தை குறித்து வைக்கின்றனர். அவர்களை காஸ் ஏஜன்ஸிக்கு அனுப்பி இரண்டு சிலிண்டர் உள்ளதாக 'சீல்' பெற்று வர வைக்கின்றனர். இப்பணியின் மூலம் இரண்டு சிலிண்டர் கணக்கில் வராத 80 சதவீத கார்டுகளை கண்டறிந்து 'சீல்' வைத்துள்ளனர். மீதமுள்ள கார்டுகளையும் கண்டறிந்து கணக்கில் கொண்டு வரும் பணி தீவிரமாக நடக்கிறது.இதுவரை ஒரு சிலிண்டர் உள்ளதாக கார்டுகளுக்கு இரண்டு சிலிண்டர் உள்ளதாக கணக்கில் கொண்டு வரும் போது, அதற்கென ஒதுக்கீடு அளிக்கப்படும் மண்ணெண்ணெயும் குறைக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை