உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கவுந்தப்பாடி நால்ரோட்டில் சிக்னல் இயங்காததால் விபத்து அபாயம்

கவுந்தப்பாடி நால்ரோட்டில் சிக்னல் இயங்காததால் விபத்து அபாயம்

கோபி : கவுந்தப்பாடி நால்ரோட்டில் சிக்னல் இயங்காததால், வாகன விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.கோபி அருகே கவுந்தப்பாடி நால்ரோட்டை கடந்து, சிறுவலுார், கோபி, பவானி, ஈரோடு ஆகிய பகுதிகளுக்கு செல்ல முடியும். எந்நேரமும் வாகன நடமாட்டம், அதிகமுள்ள சாலையில், பல ஆண்டுகளுக்கு முன், கவுந்தப்பாடி நால்ரோட்டில், போக்குவ-ரத்து போலீசார் சிக்னல் அமைத்தனர். சிக்னல் பல மாதங்களாக இயங்குவதில்லை. இதனால் நால்ரோட்டை கடக்கும் வாக-னங்கள், தாறுமாறாக பயணித்து, ஒன்றோடு ஒன்று முட்டி மோதி விபத்துக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து பிரிவு போலீசார் சிக்னலை பயன்பாட்டுக்கு கொண்டு, வர வாகன ஓட்-டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை