உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாழ்ந்து காட்டுவோம் திட்ட ஆய்வு கூட்டம்

வாழ்ந்து காட்டுவோம் திட்ட ஆய்வு கூட்டம்

ஈரோடு : மகளிர் திட்டம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த, மாதாந்திர ஆய்வு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கலெகடர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். கடந்தாண்டு மகளிர் குழுக்களுக்கான கடன் இலக்கு, 840 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு, முழுமையாக வங்கி கடன் வழங்கப்-பட்டது.நடப்பாண்டில் மகளிர் குழுக்களுக்கு, 1,109 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மகளிர் குழுவினர் இது-போன்ற கடன் வாய்ப்பு, தொழில் வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேற அறிவுறுத்தப்பட்டது. மகளிர் குழு மூலம் துவங்கப்-பட்ட பல்வேறு தொழில்கள் குறித்து, குழு உறுப்பினர்கள் தொழில் மற்றும் கடன் பெற்ற அனுபவம் குறித்து விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை