உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம், காவிரி ஆற்றில் சோளீஸ்வரர் கோவில் கரை ஓரப்பகுதி, அங்கன்வாடி பள்ளி முகாமை அமைச்சர் முத்துசாமி, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கேட்டறிந்தனர்.பின், அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது: மேட்டூர் அணை நிரம்பியதால், காவிரியில் அதிகமாக தண்ணீர் வருவதை கவனத்தில் எடுத்து கொண்டு, வாய்க்காலிலும் தண்ணீர் திறக்கப்-பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில், 41 இடங்களை கண்டறிந்து, அவ்விடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் ஏற்கனவே தண்ணீர் வந்ததால், அங்குள்ளவர்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். பவானியில் கரை ஓரத்தில் இருந்தவர்களுக்கு வேறு இடம் வழங்கப்பட்டது. அவர்கள் செல்லாததால், அங்கு பாதுகாப்பு கூடுதலாக்கப்பட்டுள்-ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அம்மா-பேட்டை, நெரிஞ்சிபேட்டை பகுதிகளிலும் தண்ணீர் கரையை ஒட்டி அதிகமாக வரும். அவை நீர் வழிப்புறம் போக்காகும். அதற்கு பதில், மாற்று இடம் கொடுத்தும், அங்கு செல்லாததால் பிரச்னை உள்ளது. தேவையான இடங்களில் படகு, டயர் போன்-றவை தயாராக வைத்துள்ளோம். யாரும் நீச்சல் அடிக்கவும், மீன் பிடிக்கவும் செல்லக்கூடாது. ஆடிப்பெருக்கு வருவதால், ஆற்-றுக்குள் இறங்கி ஏதும் ஆபத்தாக செய்யக்கூடாது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ