உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாலையில் ஏற்பட்ட குழியால் விபத்து அபாயம்

சாலையில் ஏற்பட்ட குழியால் விபத்து அபாயம்

ஈரோடு: ஈரோடு, திருநகர் காலனி பம்பிங் ஸ்டேஷன் சாலையில் ஏற்பட்ட குழியால், விபத்து அபாயம் உள்ளது. ஈரோடு மாநகராட்சி, 24வது வார்டுக்கு உட்பட்ட திருநகர் காலனி, பம்பிங் ஸ்டேஷன் சாலையில், தினசரி அதிகளவில் பள்ளி வாகனங்களும், தனியார் கம்பெனி பஸ்களும் செல்கின்-றன. இந்நிலையில், அச்சாலையில் திடீரென குழி ஏற்பட்டுள்-ளது. சாலையின் கீழே சாக்கடை கால்வாய் உள்ளதால், இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எனவே, மாநகராட்சி உடனடியாக முன் வந்து, அக்குழியை மூட வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை