உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பஞ்சு குடோன் தீப்பிடித்து சாம்பல்

பஞ்சு குடோன் தீப்பிடித்து சாம்பல்

பவானி: பஞ்சு குடோன் தீப்பற்றியதில் முழுவதும் எரிந்து சாம்பலானது. சித்தோடு கொங்கம்பாளையத்தை சேர்ந்தவர் பொங்கியண்ணன். சித்தோட்டில், 'கிருஷ்ணா டெக்ஸ்' என்ற பெயரில் நூற்பாலை நடத்தி வருகிறார். இதற்கான பஞ்சு குடோன், கொங்கம்பாளையத்தில் உள்ளது. இக்குடோன், 300க்கு 10 அடி பரப்பளவில், இரும்பு தகரக் கூரை வேயப்பட்டது. சுற்றிலும் குடியிருப்பு அமைந்துள்ளது. நேற்று மதியம், 3.30 மணிக்கு மின் ஒயர் அறுந்ததில், பஞ்சில் தீப்பிடித்தது. குடோனில் இருந்த கழிவுப் பஞ்சு பேல்கள் மற்றும் பனியன் துணி முழுவதும் எரிந்தது. குடோனில் காவலுக்கு இருந்து இரண்டு பணியாளர்கள், மதிய உணவுக்கு சென்றிருந்த போது, இச்சம்பவம் நடந்துள்ளது. பவானி தீயணைப்பு வீரர்களுடன், அருகிலுள்ள பொதுமக்களும், தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஈரோட்டில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வந்து மாலை 6.30 மணியளவில் தீயை கட்டுப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ