உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கிணற்றில் தவறி விழுந்த ஆட்டோ டிரைவர் சாவு

கிணற்றில் தவறி விழுந்த ஆட்டோ டிரைவர் சாவு

ஈரோடு : ஈரோடு, மேல்மலையம்பாளையம், கருப்பணார் கோவில் பகு-தியை சேர்ந்தவர் சிவசங்கர், 32; ஆட்டோ டிரைவர். ஈரோட்டில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவரின் மனைவி தமிழ்செல்வி, 24; தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த தமிழ்செல்வி, சேனாதிபாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். தனிமையில் இருந்த சிவ-சங்கர் கடந்த, 18ம் தேதி இரவு, கருப்பணார் கோவில் அருகே கிணற்று சுவர் மீது அமர்ந்து மது குடித்துள்ளார். அப்போது தவறு-தலாக கிணற்றுக்குள் விழுந்ததில் இறந்து விட்டார். தீயணைப்பு நிலைய வீரர்கள் சிவசங்கரின் உடலை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி