உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 40 பேர் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை

40 பேர் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை

ஈரோடு: ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார், கடந்த ஜூலையில், ஸ்டேஷன் எல்லை பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் மதுபோதையில் வாகனம் இயக்கியதாக, 87 வழக்குகளை பதிந்து அபராதம் விதித்தனர். இதில் போதையில் டூவீலர் மற்றும் நான்கு சக்கர வாகனம் இயக்கிய, 40 பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய, ஆர்.டி.ஓ.,க்களுக்கு பரிந்துரை செய்தனர். இதுவரை இல்லாத வகையில் அதிக எண்ணிக்கையில் மதுபோதை வாகன இயக்க வழக்குகள் பதிவானதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை