உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.6.09 லட்சத்துக்கு விளை பொருள் விற்பனை

ரூ.6.09 லட்சத்துக்கு விளை பொருள் விற்பனை

ஈரோடு : ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி உப ஒழுங்குமுறை விற்-பனை கூடத்துக்கு, 18,959 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர்.ஒரு கிலோ தேங்காய், 23.26 ரூபாய் முதல், 28.89 வரை விற்ப-னையானது. மொத்தம், 7,178 கிலோ எடை கொண்ட தேங்காய், 1 லட்சத்து, 82 ஆயிரத்து, 792 ரூபாய்க்கு விற்பனையானது.அதுபோல, 161 மூட்டை கொப்பரை தேங்காயை விவசாயிகள் கொண்டு வந்தனர். முதல் தரம் கொப்பரை தேங்காய் ஒரு கிலோ, 84.30 முதல், 93.29 ரூபாய் வரையிலும், இரண்டாம் தரம் ஒரு கிலோ, 62.76 முதல், 81.86 ரூபாய் வரையிலும் விற்ப-னையானது. மொத்தம், 4,994 கிலோ எடை கொண்ட கொப்-பரை தேங்காய், 4 லட்சத்து, 26 ஆயிரத்து, 953 ரூபாய்க்கு விற்ப-னையானது.தேங்காய், கொப்பரை தேங்காய் ஆகியவை சேர்ந்து, 6 லட்சத்து, 9,735 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை