உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பில் அதிக மண் எடுக்க கடும் எதிர்ப்பு

கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பில் அதிக மண் எடுக்க கடும் எதிர்ப்பு

பெருந்துறை : கீழ்பவானி வாய்க்காலை சீரமைப்பதற்காக கான்-கிரீட் தளம் அமைக்கும் பணி, 2020 முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதன்படி பெருந்-துறை அடுத்த திருவாச்சி அருகில், கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணி நேற்று நடந்தது. பணியின்போது வாய்க்காலில் அதிக அளவில் மண் வெட்டி எடுக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசா-யிகள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் நீர்வளத்துறை அதிகாரிகள், பெருந்-துறை போலீசார் வந்து, விவசாயிகளிடம் பேச்சு-வார்த்தை நடத்தினர். கீழ்பவானி பாசன பாது-காப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முருங்கத்-தொழுவு ரவி, அமைச்சர் முத்துசாமியிடம் மொபைல்போனில் பேசினார். 24ம் தேதி வந்து இடத்தை பார்வையிடுவதாக அவர் கூறவே, விவசாயிகள் கலைந்து சென்றனர். ஆக., 10ம் தேதிக்குள் சீரமைப்பு பணிகளை முடித்து, 15ம் தேதி வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என்பதற்காக அரசு அதிகாரிகள், ஒப்பந்தாரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ