உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வஞ்சிரம் மீன் கிலோ ரூ.1,100க்கு விற்பனை

வஞ்சிரம் மீன் கிலோ ரூ.1,100க்கு விற்பனை

ஈரோடு : ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி சாலை பகுதியிலும், ஸ்டோனி பாலம் அருகிலும் மீன் மார்க்கெட் செயல்படுகிறது. நாகை, காரைக்கால், துாத்துக்குடி, ராமேஸ்வரம் பகுதிகளில் இருந்து மீன்கள் விற்பனைக்கு வருகிறது. வழக்கமாக, 10 முதல் 15 டன் வரை வரும். தற்போது கேரளா, கர்நாடகா மாநிலங்களில் மீன்பிடி தடைகாலம் உள்ளதால், ௮ டன் மீன் நேற்று விற்பனைக்கு வந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் பிரியர்கள் பலர் காலையிலேயே குவிந்தனர். ஈரோடு மார்க்கெட்டில் மீன்கள் விலை விபரம் (கிலோ-ரூபாய்): வஞ்சிரம்--1,100, கடல் பாறை-500, சங்கரா-350, நெத்திலி மீன்-300, அயிலை-300, மத்தி-350, இறால்-700, திருக்கை-400, புளூ நண்டு-700, விளமீன்-500, வாவல்-800, அணை மீன்களான லோகு-170, ஜிலேபி-120, கட்லா-170. பாறை-160, நெய் மீன்-150க்கு விற்றது. ஈரோடு மார்க்கெட்டில் மீன்கள் விலை அதிகரித்து தான் காணப்படுகிறது. கேரளா மற்றும் கர்நாடகா போன்ற பகுதிகளில் இருந்து மீன்கள் விற்பனைக்கு வந்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை