| ADDED : ஜன 06, 2024 07:28 AM
காங்கேயம்: காங்கேயம் யூனியன் கூட்டத்தில், 24 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.காங்கேயத்தில் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் மகேஷ்குமார் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஜீவிதா ஜவகர் முன்னிலை வகித்தார். குடிநீர் குழாய் பராமரித்தல், சாலை பராமரிப்பு உள்ளிட்ட, 24 தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலாதேவி, ஹரிஹரன், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி வரதராஜ் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.