உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குடியிருப்பு பகுதியில் ஜெபக்கூடம் கட்டுவதை தடுக்க கோரி முறையீடு

குடியிருப்பு பகுதியில் ஜெபக்கூடம் கட்டுவதை தடுக்க கோரி முறையீடு

ஈரோடு : ஈரோடு, கஸ்பாபேட்டை, அசோகபுரம், கொங்கு நகரை சேர்ந்த மக்கள், கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் நேற்று மனு வழங்கி கூறியதாவது:கொங்கு நகர், அசோகபுரம், கஸ்பாபேட்டை பகுதியில், 500க்கும் மேற்பட்ட இந்து சமூகத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் புதி-தாக வந்த சிலர் மத மாற்ற செயல்களில் ஈடுபட்டு, வார கடைசி நாட்களில் வெளி மாவட்டங்களில் இருந்து பலரை அழைத்து வந்து, திருச்சபை பெயரில் ஜெபக்கூட்டம் நடத்துகின்றனர். அதிக சத்தத்துடன் பாடல் பாடுவதும், ஆடல் நிகழ்ச்சி நடத்துவ-தையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இரவில் துாங்காமல் அழுவதும், கூச்சலிடுவதுமாக இயல்புக்கு மாறாக நடந்து கொள்கின்றனர். ஆண்கள் வீட்டில் இல்லாத நேரங்களில் பெண்களிடம் பேசி, மதம் மாறும்படி வலியுறுத்து-கின்றனர். இதனால் அவ்வப்போது பிரச்னை எழுகிறது. தற்-போது அங்கு சர்ச், ஜெபக்கூடம் கட்ட முயல்கின்றனர். இதற்கு அனுமதி வழங்கக்கூடாது. இவ்வாறு மனுவில் தெரிவித்துள்-ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்