உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குழந்தைகளை வளர்க்க, வழக்கை விரைவுபடுத்த கலெக்டர் அலுவலகத்தில் முதிய தம்பதி தர்ணா

குழந்தைகளை வளர்க்க, வழக்கை விரைவுபடுத்த கலெக்டர் அலுவலகத்தில் முதிய தம்பதி தர்ணா

ஈரோடு : மகளை கொலை செய்ததால், பேரன், பேத்தியை வளர்க்கவும், வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், குழந்தைகளுடன் முதிய தம்பதி தர்ணாவில் ஈடுபட்டனர்.சிவகிரி, எல்.பீ.எஸ்., தெருவை சேர்ந்த சண்முகசுந்தரம், 60; தனது மனைவி, பேரன் கோவர்த்தன், பேத்தி கோவர்த்தினி ஆகி-யோருடன், கலெக்டர் அலுவலகம் வந்தார். நுழைவு பகுதியில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு கூறியதாவது:எனது மகள் கோகிலவாணிக்கும், ஈரோடு சூரம்பட்டி மாரப்பா முதல் வீதியை சேர்ந்த சென்னியப்பனுக்கும் திருமணம் நடந்தது. கோவர்த்தன், கோவர்த்தினி என்ற, இரு குழந்தைகள் உள்ளனர். கடந்தாண்டு செப்.,ல் மகளின் தலையில் கல்லை துாக்கிப்-போட்டு, சென்னியப்பன் கொலை செய்துவிட்டார். இரு குழந்-தைகளை நாங்கள் வளர்க்கிறோம்.சிறைக்கு சென்ற சென்னியப்பன், இரண்டு மாதங்களில் ஜாமினில் வந்துவிட்டார். எனது மகளை பற்றி தவறாக பேசி வருவதுடன், தனது கடன் பிரச்னை, நாங்கள் மக-ளுக்கு வழங்கிய நகை, பணத்தை மறைத்து விட்டார்.அவற்றை திரும்ப தர மறுக்கிறார். போலீசாரும் இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். முதியவர்களான எங்களால், குழந்தைகளை வளர்க்க இயலவில்லை. இதற்கிடையில், சென்னி-யப்பன், அவரது உறவினர்கள் சிலர் எங்களை மிரட்டி, மகள் இறப்பு குறித்து எதுவும் பேசவும், மனு வழங்கவும் கூடாது என கூறுகின்றனர்.குழந்தைகளை வளர்க்கவும், திருமணத்தின்போது நாங்கள் வழங்-கிய நகை, பணத்தை திரும்ப தரவும், கொலை குறித்து நடவ-டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.இதை தொடர்ந்து, அவர்களை போலீசார் சமாதானம் செய்து, கலெக்டரிடம் அழைத்து சென்று மனு வழங்கி அனுப்பி வைத்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை